கடலூர், டிச. 22- கடலூர் தந்தை பெரியார் படிப்பக நூலகராக செயலாற்றிய எப்போதும் எங்கு சென்றாலும் தோளில் திராவிடர் கழக கொடி பறக்க நடை பயின்ற கழகத்தோழர் தி. மாதவன் 17 12 2024 அன்று பிற்பகல் 3 .50 மணிக்கு மறைவுற்றார்.
18.12.2024 அன்று அவருடைய உடல் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.
அவரின் வீர வணக்க கூட்டம் அனைத்துக் கட்சியி னரும் பங்கேற்கவும் அவரின் தொண்டுக்கு புகழாரம் சூட்டவும் வாய்ப்பாக அமைந்தது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், அரசு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி கு.பாலசுப்பிரமணியன், மாவட்ட தமிழ் சங்க தலைவர் பேராசிரியர் ராச குழந்தை வேலன், மாவட்ட கழக செயலாளர் எழிலேந்தி, மாநகரக் கழக தலைவர் தென் சிவக்குமார், கழக காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதய சங்கர், செயலாளர் டிஜிட்டல் ராமநாதன், மாவட்ட கழக இணைச் செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பெரியார் செல்வம், மாவட்ட தலைவர் அருணாசலம், கட்டியங்குப்பம் சேகர் வேகாகொல்லை வேணுகோபால், நூலகர் கண்ணன் வி.திராவிடன், வடக்குத்து பாஸ்கர், வடலூர் புலவர் ராவணன், இந்திரஜித், குணசேகரன், முருகன், சுமலதா, பண்ருட்டி, ஒன்றிய தலைவர் கந்தசாமி, கடலூர் சுந்தரமூர்த்தி, அன்பன் சிவா, விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொறுப்பாளர் திருமார்பன், மக்கள் அதிகாரம் மாநில பொறுப்பாளர் பாலு, மாவட்ட கழக அமைப்பாளர் மணிவேல், காங்கிரஸ் கட்சியினுடைய அகில இந்திய உறுப்பினர் வழக்குரைஞர் சந்திரசேகர், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன், இராச வேலுமணி, அரசு வழக்குரைஞர் வனராஜ், கடலூர் தேவனாம்பட்டினம் அய்ங்கரன், விடுதலை, ஆடிட்டர் குமரகுரு ஆகியோர் மறைந்த தோழரின் உடலுக்கு மாலை வைத்து வீரவணக்கம் செலுத்தினர் நிகழ்ச்சியை ஓவியர் ரமேஷ் ஒருங்கிணைத்தார். மறைந்த தோழர் மாதவன் நடமாடும் பிரச்சார எந்திரம் போல் கழக கொள்கையை தந்தை பெரியாரை கடலூர் நகரில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த தொண்டராவார்.