சென்னை, டிச.22 அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் நேற்று (21.12.2024) மாலை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப் பட்ட 75ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இரு நாள்கள் விவாதம் நடைபெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரைப்பற்றி பல்வேறு கட்சியினரும் பாராட்டியும், புகழ்ந்தும் பேசினர்.
இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்கெடுத்தாலும், ‘அம்பேத்கர், அம்பேத்கர்’ என்று பேசுவது எல்லாம் ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது. அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதைவிட, ‘பகவான்’ பெயரை உச்சரித்தால், ‘சொர்க்கமாவது’ கிடைக்கும் என்று எள்ளலாகப் பேசினார்.
அவையில் பி.ஜே.பி.யைத் தவிர அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கொந்தளித்து எழுந்து முழக்கமிட்டனர். உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்; பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். நாடாளுமன்றத்தையே நடத்த முடியாத அளவுக்கு எதிர்ப்புகள் பீறிட்டுக் கிளம்பின; நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி, உள்துறை அமைச் சரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். பதவி விலக வேண்டும்; பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்ற முழக்கம் உணர்ச்சிப் பூர்வமாக இருந்தது.
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசியதைக் கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நேற்று (21.12.2024) சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் மாலை 5 மணியளவில் அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் தலை மைக் கழக அமைப்பாளர் காஞ்சி கதிரவன் ஒலி முழக்கமிட கழகத் தோழர்கள் தொடர் ஒலி முழக்கமிட்டனர்.
திராவிடர் கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை, திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினர்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கண்டன ஆர்ப்பாட்ட உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ. கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேசு ஆகியோர் பங்கேற்றனர்.
மகளிரணித் தோழர்கள்
சி.வெற்றிச்செல்வி, அமலசுந்தரி, சி. மெர்சி, வெ.கா. மகிழினி, மு. பசும்பொன், வி.வளர்மதி, பி.அஜந்தா, வி.தங்கமணி, த.மரகதமணி, ராணி, தங்க. தனலட்சுமி, கனிமொழி, ஞானதேவி, சீர்த்தி, தொண்டறம், செல்வி (பூவை).
தென் சென்னை
இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), செ.ர. பார்த்தசாரதி (மாவட்ட செயலாளர்), டி.ஆர். சேதுராமன், கோ.வீ.ராகவன், பி.டி.சி. இராஜேந்திரன், நல். இராமச்சந்திரன், கரு. அண்ணாமலை, கண்ணன், பெரியார் மணிமொழியன், ச. மகேந்திரன், ந. மணிதுரை. பெரியார் யுவராஜ், ம.பெரியார்ஆதவன், இரா. மாரியப்பன், ம.பெரியார் இனியன், மயிலை பாலு, அரங்க. இராஜா, மு. சண்முகப்பிரியன்.
வடசென்னை
வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்ட தலைவர்), புரசை சு. அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), கி. இராமலிங்கம், தி.செ. கணேசன், கொளத்தூர் இராசேந்திரன், மணிவண்ணன், நா. பார்த்திபன், சி. பாசுகர், அயன்புரம் துரைராஜ், வண்ணை வெங்கடேசன், கோ. தங்கமணி, கு. ஜீவா, கண்மணி துரை, பரசுராமன், சங்கர், சேகர், அரசு, மாணவர் கழகம் சஞ்சய், சி. அன்புச்செல்வன்.
கும்மிண்டிபூண்டி மாவட்டம்
புழல் த. அனந்தன் (மாவட்ட தலைவர்), வடகரை உதயகுமார் (ஒன்றிய செயலாளர்), ஜெகத் விசயகுமார் (ஒன்றிய தலைவர்), க.ச.க. இரணியன் (மேனாள் இளைஞரணி செயலாளர்), சோழவரம் சக்கரவர்த்தி, (மாவட்ட இளைஞரணி தலைவர்) ஆ. ஆகாஸ் (பெரியபாளையம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர்), ஜனாதிபதி (மா.த. பகுத்தறிவாளர் கழகம்),பொன்னேரி அருள் (நகர தலைவர்), கஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), பெரியபாளையம் அருணகிரி (ஒன்றிய தலைவர்).
தாம்பரம் மாவட்டம்
ப. முத்தையன் (மாவட்ட தலைவர்), கோ. நாத்திகன் (மாவட்ட செயலாளர்), மா. இராசு, மா.குணசேகரன், அ. கருப்பையா, போரூர். பரசுராமன், தாம்பரம் சு. மோகன்ராஜ், சீர்காழி இராமண்ணா, சந்திரசேகர், பெருங்களத்தூர் சங்கர், பெரியார் பிஞ்சு இவண்,
ஊரப்பாக்கம் இரா. உத்திரகுமாரன்.
ஆவடி மாவட்டம்
க. இளவரசன் (மாவட்ட செயலாளர்), க. தமிழ்ச்செல்வன், மு. ரகுபதி, பூ. ராமலிங்கம், சி. வச்சிரவேலு, முத்துக்கிருட்டிணன், வேல்சாமி, பெரியார் மாணாக்கன், மகிழன், மாணிக்கம், க. கலைமணி, ஆவடி இ.தமிழ்மணி, மணிமாறன், எ.கண்ணன், அய். சரவணன், கார்த்திகேயன், ஜெகதீஷ், அம்பத்தூர் ஆ.வெ. நடராசன், வேல்.முருகன், சுந்தர்ராஜன், இரணியன் (எ) அருள்தாசு, நாகராசன்.
சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன், திருவொற்றியூர் மாவட்ட செயலாளர் ந. இராசேந்திரன், இரா. சத்தீஷ்குமார், வாசகர் வட்டம் ஜெ. ஜனார்த்தனம், மு.இரா. மாணிக்கம் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள்
1. வாழ்க வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
2. வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!
3. வாழ்க வாழ்க வாழ்கவே
சமூகநீதிப் போராளிகள்
வாழ்க வாழ்க வாழ்கவே!
4. கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம்
பாபாசாகேப் அம்பேத்கரை
அவமதித்த அமித்ஷாவை
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
புரட்சியாளர் அம்பேத்கரை
அவமதித்த பா.ஜ.க. அரசைக்
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
5. இந்திய அரசமைப்புச் சட்டத்தை
இயற்றித் தந்த அம்பேத்கரை
நாடாளுமன்றத்தில் அவமதித்த
ஆர்.எஸ்.எஸ். அமித்ஷாவைக்
கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
6. புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர்
மக்கள் தலைவர்! மக்கள் தலைவர்!
7. ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தால்
அம்பேத்கரை ஏற்க முடியாது!
ஸநாதனக் கூட்டத்தால்
சமத்துவத்தை ஏற்க முடியாது!
8. அடையாளம் காண்பீர்! அடையாளம் காண்பீர்!
ஆர்.எஸ்.எஸ்.- – பா.ஜ.க.வின்
உண்மை முகத்தை அடையாளம் காண்பீர்!
9. அம்பேத்கரை விழுங்க நினைக்கும்
ஆர்.எஸ்.எஸ்.சை அடையாளம் காண்பீர்!
10. இந்துவாகச் சாகமாட்டேன்
என்று முழங்கிய அம்பேத்கரை
இந்துத்துவா கும்பலால்
ஏற்க முடியுமா? ஏற்க முடியுமா?
சிந்திப்பீர்! சிந்திப்பீர்!
11. அம்பேத்கர் வெறும் படமல்ல! படமல்ல!
சமத்துவத்தின் பாடமே அம்பேத்கர்! அம்பேத்கர்!
விடுதலைக் குரலின் வீச்சே அம்பேத்கர்! அம்பேத்கர்!
ஸநாதனத்தின் வைரியே அம்பேத்கர்! அம்பேத்கர்!
தந்தை பெரியாரின் தோழரே அம்பேத்கர்! அம்பேத்கர்!
12. எங்கள் தந்தை பெரியாரும்
புரட்சியாளர் அம்பேத்கரும்
நாணயத்தின் இரு பக்கங்கள்!
ஒடுக்கப்பட்டோரின் காவலரண்கள்!
13. ஜாதியை ஒழிப்போம்!
சமத்துவம் காப்போம்!
14. காப்போம் காப்போம்!
அரசியலமைப்பு உறுதி செய்யும்
மதச்சார்பின்மையைக் காப்போம்!
சமூக நீதியைக் காப்போம்!
15. வாழ்க வாழ்க வாழ்கவே
அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே!
வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே’’