தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு 370 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் கூறியுள்ளது.