காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து இவ்வாறு செய்வதால், உடல் ஒரு கட்டத்தில் எளிதில் அதனை ஏற்கும். இப்படியான சூழலில் தான், பவர் வாக்கிங் கைகொடுக்கிறது.
உடலுக்கு சவாலை அதிகரிக்க, கையில் குறைந்த அளவிலான எடையை (Dumbbells) சுமந்து சாதாரண நடை வேகத்தை விட கூடுதல் வேகமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம். இது உடலின் உழைப்பை அதிகரித்து, கூடுதல் கலோரி எரிக்க உதவும்