இது வரையில் நமது சர்க்காருக்கு மிகவும் நல்ல பிள்ளையென்று நடந்து வந்த நமது பெரியார் ஸ்ரீ மான் பி. கேசவப்பிள்ளை அவர்களுக்கு நமது சர்க்காரார் கொடுத்திருக்கும் சன்மானம் என்னவெனின், ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடித்துக்கட்டுங்கள்,’ என்கின்ற நிலையில் வந்து விட்டது. சட்ட சபையில், நமது பெரியார்பேர் கெடும் வண்ணம் சர்க்காரால் பிரசுரமாயிருந்த அறிக்கையில் நன்மை இல்லாவிட்டாலும் அதிலுள்ள கெட்டகாரியத்தை எடுக்கவாவது ஒரு பெரிய கமிட்டிநியமிக்க வேண்டியது மிகவும் அவசிய மாகப் போய் விட்டது. சர்க்காருக்கு நல்ல பிள்ளைகளாக நடக்க விரும்புகிற வர்களுக்கெல்லாம் என்றைக்காவது ஒருநாள் இக்கதி ஏற்படுமென்பதை நாம் சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
– குடிஅரசு – 23.08.1925
பிச்சை வேண்டாம் நாயை பிடித்துக்கட்டுங்கள்
Leave a Comment