டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசின் விவகாரங்களில் தேவையின்றி நுழையும் ஆளுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நடப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத் தின் கருப்புப் பக்கங்களாக உள்ளது என்கிறது தலையங்க செய்தி.
* இனி கோவில் – மசூதி பிரச்சினைகளை பேசாதீர்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சுக்கு மறு நாள் உ.பி. முதலமைச்சர் யோகி, கோவில்கள் குறித்து பேசி சர்ச்சையை கிளப்புகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வார்த்தைகளை செயல்களுடன் பொருத்துங்கள், ஆர்எஸ்எஸ் தலைவருக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி. “இப்போது அவரது கட்சி சம்பலில் மக்கள் மீது போடப்பட்ட பொய்யான புகார்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவராக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சவுத்ரி நியமனம்.
தி டெலிகிராப்:
* தாங்கள் தாக்கப்பட்டதாக கூறும் பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் பிரதாப் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் மற்றும் எஸ் ஃபாங்னான் கொன்யாக் ஆகியோரை விட “சிறந்த நடிகராக” தனது வாழ்க்கையில் ஒருபோதும் பார்த்ததில்லை என எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டன ஊர்வலத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் ஜெயா பச்சன் கிண்டல்.
– குடந்தை கருணா