மதுக்கூர், டிச. 21- பட்டுக்கோட்டை கழக மாவட்ட இயக்க முன்னோடி சுயமரியாதைச் சுடரொளி நாகை என்..பி..காளியப்பனின் மகன் சந்தோசத்தின் மனைவி ஆதிஸ்வரி மறைந்ததை ஒட்டி அம்மையாரின் படத்திறப்பு 18..12..2024 அன்று இரவு 7 மணி அளவில் மதுக்கூர் ஒன்றியம் படப்பை காட்டில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.
படத்திறப்பு நிகழ்ச்சி
பட்டுக்கோட்டை கழக மாவட்ட தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன் தலைமையில், மதுக்கூர் அரசு மருத்துவமனை மருத்துவர் இராஜ்குமார் அம்மையார் படத்தினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் இராஜகோபால், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மதுக்கூர் வடக்கு ஊராட்சி மன்றத் தலைவர் என்.கே.ஆர்.நாராயணன், திமுக நகர பொறுப்பாளர் சிபி என்கின்ற பெரமையன், கழக ஒன்றிய துணைத் தலைவர் மண்டலகோட்டை சரவணன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் கருப்பூர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினர்.
அம்மையாருக்கு டார்வின், பாலகுமார் ஆகிய மகன்களும், ஜோதி என்கின்ற மகளும் கல்வின் என்ற மருமகனும் உள்ளனர். அம்மையாரின் பேரன் ஆதித்யன் இயக்க உணர்வாளராவார். விடுதலைச் சந்தா வழங்குவதாக ஆதித்யன் அவர்களால் உறுதி அளிக்கப்பட்டது.