மதுரை, டிச. 21- புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், 15.12.2024 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலாளர் பா.முத்துக்கருப்பன் இல்லத்தில் நடைபெற்றது,
நிகழ்விற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஏ.பி. சாமிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் த.ம.எரிமலை மாவட்ட செயலாளர், பா. முத்துக்கருப்பன், மாவட்ட துணைத் தலைவர் அழ.சிங்கராசன், மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் போ.காவேரி முன்னிலை வகித்தனர்.மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி நோக்க உரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா.சதீஸ்குமார், மாணவர் கழக துணை செயலாளர், ச. அறிவுச்செல்வி, மாணவர் கழக துணை தலைவர் ச. அறிவுப்பாண்டி, மாணவர் கழக பா.சுஜித்ரா, பா.கவின்மாறன், பி.தர்மராஜ், கவிதா, பாண்டிமுணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.முத்துப்பாண்டி. கலந்து கொண்டனர்.
இரங்கல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினருமான, சுயமரியாதை வீரர் திரு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
புதிய கிளைக்கழகம் அமைக்கப்படும்
மதுரை புறநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பாக நகரங்கள். ஊராட்சி , பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், புதிய கிளைக் கழகம் அமைத்து கழக இளைஞரணியை புதுப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
மதுரை புறநகர் மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பலகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல் பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல் என தீர்மானிக்கப்படுகிறது.
அதிகளவில் சந்தாக்கள்
தந்தை பெரியாரின் தத்துவ கொள்கை வாரிசு தமிழர் தலைவர் நமது குடும்பத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக. உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மதுரை புறநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
டிசம்பர் 28,29, இரண்டு நாட்கள் திருச்சியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாட்டில் மதுரை புறநகர் மாவட்ட கழக இளைஞரணி சார்பில் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.