தமிழ்நாட்டில் பிறந்து விட்டதால் தந்தை பெரியார் அவர்கள் தமிழர்களுக்கு மட்டுமான தலைவர் அல்ல. இந்தியாவுக்கு மட்டுமான தலைவர் அல்ல. உலகம் முழுமைக்குமான தலைவர்தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் முன்மொழிந்த கொள்கைகள் அனைத்தும் அனைத்து நாட்டுக்கும் – அனைத்து மக்களுக்கும் பொதுவான சிந்தனைகள் உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள் எனக்கு எந்தப் பற்றும் இல்லை. மனிதப் பற்று மட்டுமே உண்டு என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
1. சுயமரியாதை – Self Respect
2. பகுத்தறிவு – Rationality
3. சமதர்மம் – Socialism
4. சமத்துவம் – Equality
5. மானுடப்பற்று – Humanism
6. ரத்த பேதமில்லை – Non – discrimination based on blood.
7. பால் பேதமில்லை – Non – discrimination based on Gender.
8, சுய முன்னேற்றம் – Self development
9. பெண்கள் முன்னேற்றம் – Women Empowerment
10. சமூகநீதி – Social Justice
11. மதச்சார்பற்ற அரசியல் – Secular Politics
12. அறிவியல் மனப்பான்மை – Scientific Temper
இவைதான் பெரியாரியத்தின் அடிப்படை இவை உலகம் முழுமைக்குமான கருத்தியல்கள்தான். இந்த கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும்.
( 1.4.2023 அன்று வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையிலிருந்து….