சோழர் காலத்தில் மனுதர்மம் – பெரிய புராணத்தில் மனு தர்மம்!

2 Min Read

அரசியல்

பெரிய புராணத்தில் சூத்திரன் என்பவன் நல்ல குலத்தில் பிறந்தவன், தொல் குலத்தில் பிறந்தவன் என்று தான் சேக்கிழார் எழுதி இருக்காரு அதுனால சூத்திரன் என்ற சொல் அந்தக் காலத்தில் நல்ல பெயரில் தான் இருந்தது சோழ அரசனுக்கே “சூத்திர சோழன்” என்ற பெயர் இருந்தது – அதுனால வருணாசிரம முறையில் கிடையாது என்று  மன்னர் மன்னன்  உருட்டி இருக்காரு. பெரிய புராணத்தில் இருக்குற விஷயத்தை கொஞ்சம் சொல்ல மறந்துட்டாரு மன்னர் மன்னன்

கழற்றி அறிவார் நாயனார் புராணம்

“வேத நெறியின் முறை பிறழா மிக்க ஒழுக்கம் தலை நின்ற

சாதி நான்கு நிலை தழைக்கும் தன்மைத்து ஆகி தடம் மதில் சூழ்

சூத வகுள சரள நிரை துதையும் சோலை வள நகர் தான்

கோதை அரசர் மகோதை எனக் குலவும் பெயரும் உடைத்துலகில்”

கழற்றி அறிவார் நாயனார் புராணத்தில் நான்கு வருண முறை பிறழாமல் இருப்பது ஊரின் சிறப்பு என்று பெரிய புராணத்தில் இருக்கு.

அதே கழற்றி அறிவார் நாயனார் புராணத்தில் “நீதி மனுநூல் நெறி” என்ற வார்த்தை கூட இருக்கு. மனுவுக்கு மன்னர் மன்னன் விளக்கம் தரல.

“உலகு புரக்கும் கொடைவளவர் உரிமைச் செழியர் உடன் கூட

நிலவு பெரு முக் கோக்களாய் நீதி மனுநூல் நெறி நடத்தி

அலகில் அரசர் திறை கொணர அகத்தும் புறத்தும் பகை அறுத்து

மலரும் திரு நீற்று ஒளிவளர மறைகள் வளர மண் அளிப்பார்”

திருநாளைப் போவார் நாயனார் புராணத்தில் புலைச் சேரியில் வாழ்ந்த நந்தனாரை முதலில் கோவிலுக்குள் விடவில்லை?

“இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்

அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி

மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எலாம் தீர்ப்பதற்கு

முன் அணைந்து கனவின் கண் முறுவல் ஒடும் அருள் செய்வார்”

நந்தனாரை இன்னல் தரும் இழி பிறவி என்று தான் சேக்கிழார்  பாடி இருக்காரு. 

“இப் பிறவி போய் நீங்க எரியின் இடை நீ மூழ்கி

முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து

அப் பரிசே தில்லை வாழ் அந்தணர்க்கும் எரி அமைக்க

மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்”

அந்த இழி பிறவி போக அந்தணர் வளர்த்த வேள்வியில் இறங்கி பூணூல் அணிந்து தான் கடவுளை அடைய முடிந்தது. இங்கு தீண்டாமை இல்லை(வருண முறை இல்லை) என்றால்  எதுக்கு பெரிய புராணத்தில் மனு மற்றும் தீண்டாமை காரணமாக கோவிலுக்குள் போக முடியாமல் இருந்த நந்தனார் பற்றிய கதையை எதுக்கு திரு நாளைப் போவர் நாயனார் புராணத்தில் சேர்க்கணும்?

மன்னரை காப்பற்ற உண்மையை மறைக்கும் கூட்டம் இதுக்கு பதில் சொல்லணும்..

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *