கன்னியாகுமரி, டிச. 20- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து பரப்புரையைத் தொடங்கிவைத்தார். கழக பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி ஒன்றிய செயலாளர்கள் மா.ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் செயலர் எஸ். அலெக்சாண்டர், திமுக தொழிற்சங்க நிர்வாகி க.வ. இளங்கோ, மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை குமரி செல்வன், முத்துவைரவன்,ம.செல்வராசு,கு.சந்திரன், பிரசாந்த் ஆகியோர் பங்கேற்று மூடநம்பிக்கையை முற்றாக ஒழிக்கும் துண்டறிக்கைகள், நூல்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பொதுமக்கள் ஆர்வமுடன் படித்து அறிவுத்தெளிவு பெற்றனர்.