கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு அமுதம் அங்காடிகளில் குறைந்த விலையில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை உணவுத் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தொடங்கி வைத்துள்ளார். இந்த தொகுப் பில் மஞ்சள் தூள், அர.சர்க்கரை, பாசு மதி அரிசி, ரவை, மைதா, ஆட்டா, சூரிய காந்தி எண்ணெய், முறுக்கு மாவு, அதிரச மாவு, பிரியாணி மசாலா, சாம்பார் பொடி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக
பிஜேபியைச் சேர்ந்த சி.டி.ரவி கைது
பெலகாவி, டிச.20 கருநாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி கெப்பாள்கரை தகாத வார்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து ஒன்றிய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசவுதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே 19.12.2024 அன்று கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது, லட்சுமி கெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வார்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தார்.
இதனிடையே, அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை காவல்துறையினர் கைது செய்தனா்.
இந்த விவகாரம் கருநாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. சி.டி.ரவியின் கருத்து தன் மனதை காயப்படுத்தி உள்ளதாக அமைச்சா் லட்சுமி கெப்பாள்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்தார். சி.டி.ரவியை கைது செய்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.