சென்னை, ஜூலை 22 – 44ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் தி.மு. கழக இளைஞர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும் தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவு வருமாறு:-
தி.மு.க.வின் இதயமாம் இளைஞரணிக்கு இன்று (20.07.2023) 44 வயது. 44ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இளை ஞரணிச் செயலாளர் உதயநிதி அவர்க ளுக்கும் புதிதாக பொறுப்பேற் றுள்ள நிர்வாகிகளுக்கும் இளை ஞரணியின் ஆற்றல்மிகு இளைஞர் கள் அனைவர்க்கும் எனது மன மார்ந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன்.
உறுதுணையாக இளைஞர் அணி! தி.மு.க.வின் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் வெற்றிக்கும் மகிழ்ச் சிக்கும் தோன்றிய காலம் முதல் உறு துணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்க ளிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள் கிறேன்.
தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வீர்! உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத் திய திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புக ளாக அமைந் திருந்தன. இயக்கத்தை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்குப் பதிலளிக்கும் கூட்டங் களாகவும் அமைந்திருந்தன.
இத்தகைய பாசறைக் கூட்டங்களை வருங்காலத்திலும் தொட ரக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியாவைக் காக்கும் நாடா ளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை நான் அதிகம் எதிர் பார்க்கிறேன். தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் பரப்புரை செய் வீர்கள் என்பதில் சந்தேக மில்லை. அதே நேரத்தில் தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும்.
அந்த தேர்தல் பணிகளை எப் படிச் செய்ய வேண்டும் என்பதை இளைஞரணிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனை வர்க்கும் கற்றுத்தர வேண்டும். இதற் கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணிப் பொறுப்பாளர்களுக் கும் வழங்குமாறு இளைஞரணிச் செயலாளரைக் கேட்டுக் கொள் கிறேன்.
எந்த நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புடனும் இளைஞர ணியைத் தமிழினத் தலைவர் முத் தமிழறிஞர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் அவர் களும் தொடக்கி வைத்தார்களோ அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக் கையுடனும் நான் இருக்கிறேன். உங்களால் முடியும்! உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துகள்!
-இவ்வாறு தி.மு.க.தலைவர், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது வலைத்தளப் பதிவில் வாழ்த்தி யுள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு!
உதயநிதி பொறுப்பேற்ற பின் நடத்திய திராவிட மாடல் பாச றைக் கூட்டங்கள் நமது கொள் கையை ஊட்டும் வகுப்புகளாக அமைந்திருந்தன.
தி.மு.க.வை நோக்கி வரும் இளைஞர்களை ஈர்க்கும் கூட்டங் களாக மட்டுமல்ல, கொள்கை எதிரி களுக்குப் பதிலளிக்கும் கூட்டங்க ளாகவும் அமைந்திருந்தன. இத்த கைய பாசறைக் கூட்டங்களை வருங்காலத்திலும் தொடரக் கேட்டுக் கொள்கிறேன்.