வரி ஏய்ப்பு
இந்தியாவில் கடந்த 2018-2019 முதல் 2022-2023ஆம் ஆண்டு வரையில், ஓப்போ, விவோ, ஷாவ்மி உள்ளிட்ட சீன நாட்டின் அறிதிறன் பேசி தயாரிப்பு நிறுவனங்கள் ரூ.9,000 கோடி அளவில் சுங்க வரி மற்றும் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல்
காசநோய்
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதி மக்களின் நலனுக்காக 424 ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிறப்பு மருத்துவ மய்யம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை மாநில பொது சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது.
வாக்காளர்
சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டி யல் சரிபார்க்கும் பணி நேற்று (21.7.2023) தொடங்கியது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தகவல்.
நுண்ணறிவு
கால்நடை மருத்துவ அறிவியல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் செல்வகுமார் தகவல்.
அறிவுறுத்தல்
அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித் துள்ள மருத்துவக் கல்லூரிகள், கடந்த ஆண்டு இருந்த அதே எண்ணிக்கையிலான எம்பிபிஎஸ் இடங்களுக்கு நிகழாண்டிலும் மாணவர் சேர்க்கையைத் தொடங்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
கலந்தாய்வு
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (22.7.2023) தொடங்கியது.
சிறப்பு அதிகாரி
உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக வி.அருண்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்த ரவை தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்து உள்ளார்.