ஆவடி, டிச. 19- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில் மாவட்ட இளைஞ ரணி துணை செயலாளர் சென்ன கிருட்டிணன் கடவுள் மறுப்பு கூற மாவட்ட செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாராட்டு
தந்தை பெரியார் அவர்களின் அண்ணனின் பேரனும் மேனாள் ஒன்றிய அமைச்சரும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப் பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவிற்கு ஆவடி மாவட்ட கழகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
கேரள மாநிலம் வைக்கத்தில் 12-12-2024 அன்று நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பாக முன்னிலை வகித்த திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும் ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர் களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய கேரள மாநில முதல்வர் பிணராயிவிஜயன் அவர்களுக்கும் பாராட்டும் வாழ்த் துகளையும் தெரிவித்து கொள்கிறது.
‘வைக்கம் விருது’ பெற்ற கருநாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தை சார்ந்த எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான தேவநூரமஹாதேவா அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது.
விடுதலை சந்தா முடிவடையும் நிலையில் உள்ள தோழர்களை அணுகி புதுப்பிக்க வலியுறுத்தவும் புதிய சந்தாக்களை சேர்க்க தீவிரமாக செயல்படுவது.
டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலை களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தலைமைக் கழகம் அறிவிக்கும் தந்தை பெரியார் அவர்களின் நினைவுப் பேரணியில் கலந்து கொள்வது.
டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடைபெறும் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டிற்கு ஆவடி மாவட்டம் சார்பில் தனிப்பேருந்தில் சென்று கலந்து கொள்வது.
நிதி
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்க தீவிரமாக செயல் படுவது.
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலரும் களப்போராளியுமான பவளவிழா நாயகர் இரா.கோபால் அவர்களின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழகத் தின் சார்பில் பாராட்டும் வாழ்த்தும் கரவொலி மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்களை யொட்டி ஆவடி மாவட்ட கழக காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், துணை தலைவர் மு.ரகுபதி, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.வெங்கடேசன்,ஆவடி நகர தலைவர் கோ.முருகன், செயலாளர் தமிழ் மணி, பட்டாபிராம் பகுதி தலைவர் வேல்முருகன்,திருமுல்லைவாயில் பகுதி தலைவர் இரணியன் (எ) அருள் தாஸ், அம்பத்தூர் பகுதி தலைவர் பூ.இராமலிங்கம்ஆகியோர் உரையாற்றிய பின் பகுத்தறிவாளர் கழக மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திகேயன் உரையாற்றினார்.
நிகழ்வில் ஆவடி மாவட்ட கழக துணை தலைவர் வை.கலையரசன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,ஆவடி நகர துணை தலைவர் சி.வச்சிரவேல், திருமுல்லைவாயில் பகுதி செயலாளர் ரவீந்திரன், திருநின்றவூர் பகுதி இளைஞரணி செயலாளர் சிலம்பரசன், பெரியார் பெருந் தொண்டர் அம்பத்தூர் அ.வெ.நடராசன், ராணி ரகுபதி, சப.மனோகரன், பட்டரைவாக்கம் ரவிச்சந்திரன், ஆவடி நடராஜன், சுந்தர்ராஜன், அரிகிருஷ்ணன், புருஷோத்தமன், பூவை சந்தோஷ், பெரியார் பிஞ்சு தருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் ஜெயராமன் நன்றி கூறினார்.