மன்னார்குடி, டிச. 19- 11.12.2024 அன்று இயற்கை எய்திய மன் னார்குடி நகர திராவிடர் கழகச் செயலாளர் ஒய்வு பெற்ற நில அளவையாளர் மு.இராமதாசு படத்திறப்பு நிகழ்வு 15.12.2024 அன்று ஞாயிறு காலை 9 மணி அளவில் செயங்கொண்டநாதர்கோவில் வடக்குவீதி அவரின் இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் படத்தினை திறந்து வைத்து இரங்கல் தெரிவித்தார். திமுக. மேனாள் நகரச் செயலாளர் ராஜ.பூபாலன், அஇஅதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தஞ்சை இராஜசேகர் இரங்கலுரை ஆற்றினார்கள். கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் இரங்கலுரையில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவர். கழகக் கொள்கையைச் செயல்படுத்திட பணி ஓய்வுக்குப் பிறகு தீவிரமாக செயல்பட்டவர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலைச் சுற்றியுள்ள நாலுதெருவில் நடக்கக் கூடாது என்ற மடமையை 100 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய போராட்டம் நடத்திய மக்களை ஒன்று திரட்டி, போராடி அம்மடமையை நீக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அந்தப் போராட்டக் குணம் நிறைந்த இயக்கத்தில் தீவிரமாக இயங்கியது மட்டும் அல்லாமல் தன் துணைவியார் மணிமேகலை, மகன்கள் அழகரசன், திலிபன் ஆகியோரையும் கழகக் கொள்கை வார்ப்பாடு வளர்த்து இருக்கிறார். அதனால்தான் அவரின் கொள்கைக்கு சேதாரம் இல்லாமல் எவ்வித சடங்கு சம்பிராதயம் இல்லாமல் படத்திறப்பு நிகழ்வை நடத்துகிறார். அவர்களுக்கு கழகத்தின் சார்பில் நன்றியையும், மறைந்த இராமதாசுக்கு வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் சிங்காரவேலு நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்கள். மாவட்ட கழக செயலாளர் கோ.கணேசன், மாவட்ட கழக அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், ப.க. மாவட்டத் தலைவர் வை.கவுதமன், ப.க. மாவட்டச் செயலாளர் த.வீரமணி, ப.க. மாவட்ட அமைப்பாளர் இரா.கோபால், மன்னை ஒன்றியத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்டத் துணை செயலாளர் வீ.புட்பநாதன், பகுத்தறிவாளர்கள் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ் பகுத்தறிவாளர் கழக மன்னை நகரத் தலைவர் கோவி.அழகிரி, இளைஞரணி மேனாள் மாவட்டத் தலைவர் மன்னை சித்து, மன்னை நகர இளைஞரணித் தலைவர் மா.மணிகண்டன், நகர துணைத் தலைவர் வி.அழகேசன், திருப்பலாக்குடி எம்.கோவிந்தராஜ், பகுத்தறிவாளர் கழக தோழர் உள்ளிக்கோட்டை அருளரசன், தொழிலாளர் அணி மாவட்ட ச்செயலாளர் ஆட்டோ மதி, இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் க.இளங்கோவன், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எம்.பி.குமார், நீடா. நகர இளை ஞரணித் தலைவர் இரா.அய்யப்பன், மன்னை ரெத்தினவேலு, வாஞ்சூர் இளங்கோவன், மன்னை ப.க. தோழர். பழ.முருகராஜ், மகா தேவப்பட்டனம் எம்.எஸ்.சேகர், மன்னை கோபாலகிருஷ்ணன், ப.க.தோழர் ச.முரளிதரன், மேல வாசல் கோ.திரிசங்கு, மற்றும் பலர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.