திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், பரசுராமன் தெரு, மொழிப்போர் தியாகி கே.முரஅரி அவர்களின் இணையரும் மு.பொற்செழியன், மு.பாண்டியன் நெடுஞ்செழியன், மு.தென்னரசு, மு.திருமாறன், மு.தமிழ்மொழி ஆகியோரின் தாயாருமான மு.இந்திராணி அம்மாள் 18.12.2024 அன்று காலை 10.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையாரது இறுதி நிகழ்வு இன்று (19.12.2024) வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு ஆரணி கமன்டல நாகநதிக்கரையில் நடைபெற்றது.