ஆதி திராவிடர், பழங்குடி இன மக்களுக்காக
சென்னை, டிச.19- தமிழ்நாடு அரசு தாழ்த்தப்பட்ட (ஆதிதிராவிடர்) மற்றும் பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல் கடமை
தந்தை பெரியாரால் கொள்கை உரமூட்டப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும் கால மெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இந்த சமூகம் விதித்திருந்த சமூகத் தடைகளை நீக்குவதற்கான முயற் சிகளை முதற்கடமையாகக் கொண்டு செயலாற்றி வருகிறது. கோவில் தெருக்களில் நடக்க முடியாது என ஆதிக்கவாதிகளால் ஒடுக்கப்பட்டவர்களை கோவிலின் கருவறைக்குள்ளாகவே அழைத்துச் செல்வதற்காகச் சட்டமி யற்றியது திராவிட மாடல் அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் சிலவற்றை குறிப்பிடுவது மிகப் பொருத்தமுடையதாகும். இந்த அரசு அமைந்தவுடன் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் தமிழ் நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுப் பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் செயல்படும் இவ்வாணை யத்தின் மூலம் தற்போது வரை 3,695 மனுக்கள் பெறப்பட்டு 2,945 மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுக் காலத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் சார்பில் ரூ.46.65 கோடிச் செலவில், 2,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின்(Tatkal Scheme) கீழ் மின் இணைப்புப் பெற 90 சதவிகிதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மயான வசதி
ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரி சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது. ரூ.10 கோடிச் செலவில், 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.45 கோடி மதிப்பீட்டில் எம்.சி. ராஜா விடுதி வளாகத்திற்குள் சுமார் 1,00,000 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதியும் ரூ.28 கோடி மதிப்பீட்டில் 4 ஆதிதிராவிடர் மாணாக்கர் விடுதிகளுக்கு புதிய விடுதிக் கட்டடங்கள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரியில் மாண வர்கள் பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் நான்கு புதிய விடுதிக் கட்டடங்கள் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. இதுபோல எண்ணற்றத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசின் சீரிய முயற்சிகளால் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. அரசின் அனைத்து துறைகளிலும் சமூகநீதிக் கோட்பாட்டை வலியுறுத்தி செயல்படும் திராவிட மாடல் அரசின் கீழ் ஆதி திராவிடர் நலத்துறை மேலும் பல சாதனைகளைப் படைக்கும். சமூகநீதி இலட்சியப் பயணத்தில் இந்தியாவிலேயே முன்னோடியாக செயல்படும் முதலமைச்சரின் தலைமையின் கீழ் சமத்துவ சமுதாயம் நோக்கி பயணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.