நடைப்பயணம் செய்பவர்கள் எல்லாம் ராகுல் காந்தியா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை, ஜூலை 22 – நடைப் பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது என ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு, தமிழ் நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலை மையில் நினைவேந்தல் செலுத்தப்பட்டது.

 நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர்கள் ரங்கபாஷ்யம், எஸ்.ஏ.வாசு, மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், கலைப்பிரிவு தலைவர் சந்திரசேகர், செயலாளர் சூளை ராஜேந்திரன், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:- மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் வெளியே பேசியது மிகப்பெரிய தவறு. ஜனநாயக படுகொலை. மணிப்பூர் கலவரம் நடந்து பல நாட்கள் ஆகியும் எதும் தெரியாது போல பிரதமர் மோடி பேசுகிறார். அமலாக்கத் துறையை ஏவி இன்று நடவடிக்கை எடுக்கின்றனர். இதேநிலை மோடிக்கும் வரும். மோடி மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. அமலாக்கத் துறை மோடியின் கைப்பாவையாக இருக்கிறது. இதே அமலாக் கத்துறை மோடி மீதும் ஒரு நாள் பாயும்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நடிகர். அவர் நடைப்பயணம் போவதாக சொல்கிறார். நடைப் பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. ராகுல்காந்தி கால்நடையாய் சென்று நாடு முழுவதும் மக்களை சந்தித்தார்.  ஆனால், அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம். அந்த பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டில் என்றுமே பா.ஜ.க.வுக்கு இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *