அதானியின் ரூ.100 கோடி நன்கொடை – தெலங்கானா அரசு நிராகரிப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், டிச.18 தெலங்கானாவில் திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் கவுதம் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடி நன்கொடையை மாநில காங்கிரஸ் அரசு நிராகரிப்பதாக அந்த மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தாா்.
இந்தியாவில் 2020 – 2024 கால கட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கவுதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.
அதே நேரத்தில் இதை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவை கடுமையாக விமா்சித்தன. இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் எதுவும் அதானி குழுமத்துடன் மின்சார ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை. தெலங் கானா மாநில காங்கிரஸ் அரசு அதானி குழுமத்துடன் ரூ.12,400 கோடி திட்டங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண் டுள்ளது என்று பாஜக பதிலளித்தது.
இந்நிலையில், அய்தராபாதில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த ரேவந்த் ரெட்டி கூறியதாவது:
தெலங்கானா மாநிலத்தில் திறன் மேம்பாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்க தொழிலதிபா் அதானி அளிக்க முன்வந்துள்ள ரூ.100 கோடியை மாநில அரசு ஏற்கப் போவதில்லை. நன்கொடை அறிவிப்பு வெளியானதில் இருந்து தேவையற்ற விவாதங்கள் உருவாகியுள்ளன. இந்த சா்ச்சை மேலும் அதிகரிக்க விரும்பவில்லை.

அதானி குழுமத்திடம் இருந்து மட்டுமல்ல, வேறு எந்த நிறுவனத்திடம் இருந்தும் தெலங்கானா அரசு ஒரு ரூபாயைக்கூட பெறாது.
நன்கொடையைப் பெற முடியாத சூழல் உள்ளது குறித்து மாநில அரசு உயரதிகாரி தரப்பில் இருந்து அதானிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ.100 கோடியை அளிக்க அதானி குழுமம் முன்வந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *