கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.12.2024

viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் பரபரப்பு; நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்க முடிவு.
* ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயக அடிக் கட்டு மானத்திற்கு எதிரானது, எதிர்க் கட்சிகள் கண்டனம்.
* இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்க்காமல் இருந்தால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாஜக நிறைவேற்றிவிடும், எழுத்தாளர் சிகா முகர்ஜி எச்சரிக்கை.

தி இந்து:

*ஆயுதப் படைகளில் மதத்தை ஏன் கொண்டு வர வேண்டும்; 1971 இந்தியா-பாகிஸ்தான் போரின் சின்னமான ஓவியத்தை ராணுவ தளபதியின் ஓய்வறையில் இருந்து அகற்றியது குறித்து இந்திய முன்னாள் சர்வீசஸ் லீக்கின் (அய்இஎஸ்எல்) தலைவர் பிரிகேடியர் இந்தர் மோகன் சிங் முப்படை தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி.

* ஓபிசி ஆராய்ச்சி மாணவர்களுக்கான கல்வி ஊக்கத் தொகை (ஸ்காலர்சிப்) தருவதில் ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாடு அமைச்சகம் தாமதம் ஏற்படுத்தியதால், ஓபிசி மாணவர்கள் கடும் பாதிப்பு. 2024 ஜனவரி மாதத்தில் இருந்தே கல்வித் தொகை தரவில்லை என சில மாணவர்கள் புகார்.

* பல அரசியல் நடவடிக்கைகள் நடைபெற்ற இடமாக திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகை விளங்குகிறது, சிறப்புக் கட்டுரை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜாவேரி ஆணையம் அறிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களையும் புறக்கணித்து, ஓபிசி சமூகத்தினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவது, மாநில பாஜக தலைமையிலான அரசு என குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்தா கண்டனம்.

*75 ஆண்டுகால அரசமைப்பு மீதான விவாதத்தில் மொய்த்ரா பங்கேற்றபோது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் “அச்சுறுத்தல்” கருத்தை தெரிவித்ததையடுத்து அமைச்சர் கிரண் ரிஜிஜு மீது நடவடிக்கை எடுக்க அறிவிக்கை அனுப்பியுள்ளார் திரிணாமுல் கட்சியின் மஹுவா மொய்த்ரா

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது ‘ஒரே சந்தையை’ உருவாக்க கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என விவசாயிகள் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *