சீரங்கம் கோவிலில் சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. துருவுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியில் துருவிவிடும். ஏண்டா என்றால் ரங்கநாதர் தூங்குகிறார்; படுத்திருக்கிறார்; தேங்காய் உடைக்கிற சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவாராம். எப்போது படுத்தார், எப்போது எழுந்திருப்பார் என்று ஒரு பயலுக்காவது தெரியுமா? அப்படி எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டேயிருக்கும் சாமிக்கு எதற்கு இத்தனை பண்டங்கள்? ஆறு காலப் பூஜைகள்?ஒருத்தனாவது ஏன் என்று கேட்கின்றானா? ஒருவனுக்காவது புத்தி இருக்கின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’