அரியலூர், டிச. 18- அரியலூர் மாவட்டம் அரியலூர் நகர மேனாள் கழக செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கு.தங்க ராசு (வயது 77) அவர்கள் மறைவுற்றார்.
மறைவு செய்தியை அறிந்த தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பொன் செந் தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் இரா.கே கோவிந்தராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா சங்கர், அரியலூர் ஒன்றிய தலைவர் சிவக் கொழுந்து, அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், அரியலூர் நகர செயலாளர் ஆட்டோ தர்மா, ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், செந்துறை மதியழகன் உள்ளிட்ட தோழர்கள் அவரது சொந்த ஊரான கொத்தவாசல் கிராமத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் கு.தங்கராசு மறைவு தோழர்கள் இறுதி மரியாதை
Leave a Comment