பெரியார், அம்பேத்கர் விழைவுகள் செயலாகும் நாள் வெகு தூரமில்லை
கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ்
திருப்பத்தூர், டிச.18-14.12.2024 அன்று மாலை 4.30 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திருப்பத்தூர் நகர் பால்னாங்குப்பத்தில் அமைந்துள்ள “கற்பி பயிலகம்” புதிய கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இக்கட்டடம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் திருப்பத் தூர் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன். கட்டடத்தில் “பகுத் தறிவு” வகுப்பறையை துணை ஆணையர் – நிலம் கையகப்படுத்தும் துறை, கருநாடக அய்.சக்திவேல் , “சுயமரியாதை ” அலுவலகத்தினை துணை ஆட்சியர் ஈரோடு திருமதி பெ. பிரேமலதாவும், “ராஜ் கீர்” நூலகத்தை மாவட்ட ஆளுநர் Rtn. DGE. வி.சுரேஷ், கற்பி பயிலகத்தின் பெயர் பலகையை இல்லத் தந்தை தூய நெஞ்சக் கல்லூரி Rev. Dr. பிரவீன் பீட்டரும் திறந்து வைத்தனர்.
நம்பிக்கை
கழகப் பொதுச்செயலாளர்
வீ.அன்புராஜ் பேசியதாவது: ஒடுக்கப்பட்ட, படிக்க வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுத்து அவர்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, அவர்களை சமூக அடித்தட்டு நிலையிலிருந்து தூக்கி விடுவதற்கு காரணமாக இருக்கின்ற, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனைகளை நடைமுறை படுத்தும் வகையில், இங்கே இந்த பயிலகத்தை நடத்தி வருவதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.தந்தை பெரியார், அம்பேத்கர் விழைவுகள் செயலாகும நாள் வெகு தூரம் இல்லை என்ற நம்பிக்கை நமக்கு அளிக்கிறது. இந்த கற்பி பயிலகம் உருவாக உறுதுணையாக இருந்த திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே. சி. எழிலரசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இங்கே நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் அவருடைய வழிகாட்டுதலில் நடைபெறுவதாக அறிந்தேன். மிகவும் பாராட்டுக்குரிய செயல். திராவிடர் கழகம் சார்பிலும் இந்த கற்பி பயிலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எண்ணம் தோன்றுகிறது, செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில் திருச்சி மு.சேகர் – மாநில செயலாளர் தொழிலாளரணி, தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், கழகப் பேச்சாளர் – தஞ்சை இரா. பெரியார் செல்வம், மாநில பகுத்தறிவாளர் கழகப் துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலரசன், மாவட்டச் செயலாளர் பெ. கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி. எ.சிற்றரசன், மாவட்ட பகுத்தறிவாளர் தலைவர் சி. தமிழ்ச்செல்வன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ.ரா.கனகராஜ், நகர செயலாளர் ஏ. டி. ஜி. சித்தார்த்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் சி. சுரேஷ் குமார், சோலையார்பேட்டை ஒன்றிய தலைவர் இராஜேந்திரன், மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர் க.முருகன், தருமபுரி மாவட்ட தலைவர் கு. சரவணன், மாநில கலைத் துறை செயலாளர் மாரி கருணாநிதி, தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் Rev. Dr. மரிய அந்தோணி ராஜ், தூய நெஞ்சக் கல்லூரி Rev Dr. மரிய ஆரோக்கிய ராஜ், கூடுதல் முதல்வர் காமராஜ் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை தலைவர் Rtn. பி.கணேஷ்மல், விஜயா குழுமம் எம்.மதியழகன், ஜுவல்லர்ஸ் ஜி.ஆர். சாமி செட்டி , மாவட்ட செயலாளர் ம. தி. மு. க., கே.வி.கண்ணதாசன், எழுத்தாளர் தலித் முரசு புனித பாண்டியன், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம் து.தலைவர் Rtn. Dr. வினோதினி, கற்பி பயிலகம் ஆசிரியர்கள் ஏ.பிரபாகரன், யு.யூதா தேதேயு, எஸ்.ராம்கி மற்றும் கழக தோழர்கள் ஏராளமான கற்பி பயிலக மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என்று சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.