22.12.2024 அன்று செங்கற்பட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் – கொள்கைக் குடும்ப விழா நடைபெறுவதையொட்டி திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், மாவட்டத் தலைவர் அ.செம்பியன், மாவட்ட செயலாளர் ம.நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு,அன்புச் செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், சிங்கை.வெ.சுரேசு, த.பரிதின் ஆகியோர் சந்தித்து பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டு அமைச்சருக்கு புத்தகங்கள், நாள்குறிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்த வேண்டுமென அமைச்சர்
தா.மோ.அன்பரசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
செங்கற்பட்டில் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் சந்திப்பு
Leave a Comment