நாகப்பட்டினம், டிச.18- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ஜனவரி 2 ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் துவங்கப்பட உள்ளது. வானிலை மாற்றம் காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங் கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. மீண்டும் கப்பல் சேவை தொடங்குவது தொடர் பாக ஆய்வு நாகப்பட்டினம் துறைமுகத்தில்நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சுபம் கப்பல் நிறுவன மேலாண்மை இயக்குநர்சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராமேசுவரம் முதல் தலை மன்னார் வரை பயணிகள் கப்பல் சேவை தொடங்கப் படும் என பிரதமர் நரேந் திர மோடி, இலங்கை அதிபர் பேசி இருப்பது மிகவும் முக்கியத்து வம் வாய்ந்ததாக கருதுகிறேன். நாகப் பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட கப்பல் சேவை, தொடர்ந்து வெற் றிகரமாக மேற்கொண்டு வருகிறோம். பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த நவம்பர் 18 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கு பிறகு டிசம்பர் 19ஆம் தேதி முதல் கப்பல் சேவையை தொடங்க திட்டமிட்டிருந் தோம். ஆனால் வானிலை மாற்றம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவைகள் காரணமாக ஜனவரி 2ம் தேதி முதல் மீண்டும் நாகப் பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ கப்பல் சேவையை தொடங்க உள்ளோம்.
கடந்த 3 மாதங்களில் எங்களுக்கு தெரிந்த சில குறை பாடுகளை சரி செய்துள் ளோம். குறிப்பாக காலையில் நாகப்பட்டினத்தில் இருந்து செல்லும் பணிகள் அதிகாலை 5 மணிக்கு துறைமுகத்திற்கு வருவதால், அவர்களுக்கு காலை உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனால் மீண்டும் கப்பல் சேவை இயக்கும் போது சுவையான உணவுகள் உள்ளிட்டவைகள் மிக தரம் வாய்ந்ததாக வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இலங்கையி லிருந்து பிற்பகல் புறப் பட்டு வரும்போது வெஜிடபுள் பிரி யாணி போன்ற தரமான உணவுகள்வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மேலும் காபி, டீ போன்றவைகள் பிரஸ் மில்கில் கொடுக்கவும் முடிவு செய்துள்ளோம்.
அதேபோல் முக்கியமாக கட்டணம்குறைக்கப் பட்டுள்ளது. கடந்த காலங் களில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சென்று வர ரூ.9,200 என்று இருந்ததை மாற்றி தற்போது, ரூ.8,500 ஆகவும், 10 கிலோ எடை வரை கட்டணம் இல்லாமல் எடுத்துசெல்லும் வகையில் மாற்றி அமைத்துள்ளோம். அதற்கு மேல் எடை எடுத்து செல்வர்கள்கூடுதல் கட்டணம் செலுத்தி எடுத்து செல்ல வேண்டும். அதிக பட்சமாக ஒரு நபர் 60 கிலோ வரை எடுத்து செல்ல முடியும். இதற்கு ஆன்லைனில் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பயணிகள் வரத்து வெகு குறைவாக இருந்தது. ஒரு நபரை வைத்து கூட கப்பல் இயக்கப்பட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முயற்சி யால் தொடர்ந்து பய ணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது ஜனவரி மாதத்தில் இருந்து சேவை தொடங்கும் போது வாரத்தில் புதன்கிழமை யை தவிர 6 நாட்களும் இயக்கப்படும்.
பயணிகள், வர்த்தகர்களின் ஆதரவோடு தொடர்ந்து கப்பல் சிறப்பாக இயக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. துறைமு கத்தில் கட்டமைப்புகள் வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தை வகுத் துள்ளது. அதற்கான பணி களையும் விரைவாக தொடங் கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.