வல்லம், டிச.17- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்ட தேசிய மாணவர் படை பயிற்;சி முகாம் 21.11.2024 முதல் 30.11.2024 வரை நடைபெற்றது.
இம்முகாமில் சுமார் 500
என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
34 (TN INDEP COT NCC UNIT)அய் சேர்ந்த என்.சி.சி அதிகாரிகள் மற்றும் ராணுவவீரர்கள் மாணவர்களுக்கு பயிற்;சி அளித்தனர்.
இந்த வருடாந்திர பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
‘Drill’ போட்டியில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்; கல்லூரி மாணவர்கள் செல்வன் அஸ்வின் முத்துக்குமார், செல்வன் தினுபருதீன் ஆகிய இருவரும் கலந்து கொண்டு முதலிடம் வென்றார்.
முதலிடம் வென்ற மாணவர்களை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா பாராட்டினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய மாணவர் படை பயிற்சிமுகாம்
Leave a Comment