சிறு, குறு விவசாயிகளை ஆதரிக்கும் வகையில், பிணையின்றி வழங்கப்படும் விவசாயக் கடனுக்கான உச்சவரம்பை ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 86 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பலனடைவார்கள் என வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.