உலகிலேயே சிறந்த உணவுகளைக் கொண்ட இடங்களின் முதல் 100 பட்டியலில் தென்னிந்திய உணவுகளுக்கு 59ஆவது இடம் கிடைத்துள்ளது. Taste Atlas நடத்திய கணக்கெடுப்பில் இத்தாலியில் உள்ள கம்பானியா பகுதியின் உணவு முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப்பின் உணவுகள் 7ஆவது இடத்தையும், மகாராட்டிரா உணவுகள் 41ஆவது இடத்தையும், மேற்கு வங்கத்தின் உணவுகள் 54ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளன.