கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.12.2024

viduthalai
2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத் தேர்தல்களை நடத்தும் உள்நோக்கத்துடன் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு திணிக்கிறது – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* நாடாளுமன்றத்தில், பாலஸ்தீன் வரைபடத்தை தாங்கிய பையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி, தனது ஆதரவை வெளிப்படுத்தும் நடவடிக்கை. 1971 வங்கதேச போர் நினைவாக அமைக்கப்பட்ட படத்தை நாடாளுமன்ற வளாகத் தில் இருந்து அகற்றியதற்கு எதிர்ப்பு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*அனைத்துத் துறைகளிலும் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. மோடி அரசின் ஆட்சியின் லட்சணம், கட்டுரையாளர் ஆகார் படேல் ஆதாரத்துடன் விளக்கம்.

*அதானியின் முறைகேடுகளை காப்பாற்றும் மோடி அரசுக்கு எதிராக, தெலுங்கானா ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் டிசம்பர் 18இல் பேரணி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் அறிவிப்பு.

தி இந்து:

* ‘புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால் வருத்தம்; எதிர்காலப் போக்கைத் தீர்மானிப்பேன்’, மகாராட்டிரா மேனாள் அமைச்சர், அஜித் பவார் காங்கிரஸ் அணியின் சகன் புஜ்பால் பேட்டி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*செபி தலைவர் விவகாரத்தில் அரசு செயல்பட தவறியது குறித்து விசாரணை: மக்களவையில் காங். வலியுறுத்தல்.

* நேருவை அவதூறு செய்யும் வகையில் மோடி உண்மைகளை திரித்துள்ளார், மன்னிப்பு கேட்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* இந்த ஆண்டு ஜூலையில் குழந்தைகளிடம் உணவுக் கொடை அளிப்பது அல்லது பொருட்களை வாங்குவது குற்றமாக கருதப்படும். இந்தூர் மாவட்ட நிர்வாகத்தில், இப்போது பெரியவர்களுக்கு உணவுக் கொடை வழங்குபவர்கள் மீதும் 2025 ஜனவரி 1 முதல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

*அவசர நிலை என்பது 18 மாதங்கள் நீடித்த ஒரு “தவறு; அது முடிவுக்கு வந்தது, ஆனால் இன்று நாட்டில் “அறிவிக்கப்படாத அவசர நிலைக்கு” காலக்கெடு எதுவும் இல்லை. பாஜக ஆட்சியில் இந்தியாவில் “பயம், அவநம்பிக்கை மற்றும் பிளவு சூழல்” நிலவுகிறது என்று காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி மாநிலங்களவையில் விளாசல்.

* ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதாகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான பிராந்திய சார்புகளை அரசு திணிப்பதாகவும் திமுகவின் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூட்டாட்சி முறைக்கு வெளிப்படையான சொல் இல்லை என்றாலும், முதல் வரியில் “பாரத், அதுவே இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம்” என்று குறிப்பிட்டுள்ளது என திருச்சி சிவா, எம்.பி. பேச்சு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *