சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏற்படும் நெருக்கடியைப் போக்க பெரம்பூர் ரயில் நிலையத்தை நான் காவது முனையமாக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையின் இரண்டாவது முனையமாக எழும்பூரும் மூன்றாவது முனையமாக தாம்பரமும் இருந்து வருகிறது. இதனையடுத்து, நான்காவது முனையமாக பெரம்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.428 கோடியில் இங்கு ரயில் முனையம் அமையவுள்ளது.