கட்டாக், டிச.16 ஒடிசாவில் நிகழ்ச்சியின் போது இரும்புக் கதவு சரிந்து பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சாலேப்பூர் பகுதியில் ராய்சுங்கூடா எனும் கிராமத்தில் 14.12.2024 அன்று இரவு நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. இதனால் அப்பகுதியினர் பலர் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்த நிகழ்ச்சி வளாகத்தின் வாயிலிருந்த இரும்புக் கதவு தீடீரென சரிந்து விழுந்ததில் அதனை கடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்கள் குழந்தைகள் உள்பட கிட்டத்தட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சாலேப்பூரிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அழைத்துச் சென்றனர். இதில், ஆறு பேருக்கு பலத்த காயங்கள் எற்பட்டுள்ளதால் மேற் சிகிச்சைக்காக எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடவுளை நம்புபவர் கைவிடப்படுவார்!
மலைக் கோயிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு
திருவண்ணாமலை, டிச.16 ஆடி மாத முழு நிலவை முன்னிட்டு 14.12.2024 அன்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனராம்! நேற்று (15.12.2024) காலை 6 மணியளவில் கிரிவலம் வந்த 50 வயது மதிக்கத்தக்க பக்தர் ஒருவர் கிரிவலப்பாதை முடியும் இடமான வேலூர் ரோடு தமிழ்நாடு ஓட்டல் அருகில் சாலையோரம் உள்ள இடத்தில் அமர்ந்தார். தான் வைத்திருந்த தண்ணீரை அருந்திய சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார்.
இதை கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவலர்கள் 108 மருத்துவ அவசர ஊர்தியை வரவழைத்தனர். 108 அவசர ஊர்தி ஊழியர்கள் வந்து அந்த நபரை சோதித்தபோது அவர் ஏற்ெகனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிரிவலப்பாதையில் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்த நபரின் உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூராய்வுக்காக பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் சேலம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் சட்டைப் பையில் பேருந்து பயணச்சீட்டை தவிர வேறு எந்த அடையாள அட்டையும், அலைபேசியும் இல்லாததால் அவர் யார் என்று கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.