தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் டி.ஆர். லோகநாதன், கும்பகோணம் துணைமேயர் சுப. தமிழழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து தமிழர் தலைவரை வரவேற்றனர். (15.12.2024)
மூத்த வழக்குரைஞர் கீதாலயன் மற்றும் வழக்குரைஞர் தோழர்கள் தமிழர் தலைவருக்கு புத்தகங்களை வழங்கினர். பரஸ்பர சகாய நிதி தலைவர் வேலப்பன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (15.12.2024)
துபாய் மூர்த்தி மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். மாவட்ட செயலாளர் துரைராஜுவின் 35ஆம் ஆண்டு மணநாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் தாராசுரம் இளங்கோவன். (15.12.2024)
குடந்தை மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவரைச் சந்தித்து சந்தா மற்றும் நன்கொடைகளை வழங்கினர். (15.12.2024)
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் மல்லிகா, கல்லூரி முதல்வர் ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் தமிழர் தலைவர் பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர் (தஞ்சாவூர், 16.12.2024).