திருத்துறைப்பூண்டி, டிச.16 திருத்து றைப்பூண்டி கழக இளைஞரணி மேனாள் மாவட்ட தலைவர் நா.சுரேஷ் முரளி, ஒன்றிய மகளி ரணி செயலாளர் சு.சித்ரா ஆகி யோரது மகள் சு.உமாபதி நாகை மாவட்டம், வேதாரணியம் தாலுகா, துளசியாபுரம் எ.காம ராஜ், மாரியம்மாள் ஆகியோரின் மகன் கா.விமல் ராஜ் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்வு 14.12.2024 அன்று மாலை 6 மணி யளவில் திருத்துறைப்பூண்டி வசந்தம் மகாலில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட கழக தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மன்னார்குடி மாவட்ட இணை செயலாளர் விக்ரபாண்டியம் வீ.புஷ்பநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் அஜெ.உமாநாத், ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
நிகழ்வில் திருத்துறைப்பூண்டி நகர தலைவர் சு.சித்தார்தன், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் சி.கலைவாணி, நகர செயலாளர் ப.நாகராஜன், நகர மகளிரணி செயலாளர் நா.ரேவதி, திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் ச.பொன்முடி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், ஒன்றிய துணை செயலாளர் ந,செல்வம், நகர துணைச் செயலாளர் கலப்பால் ப.சம்பத்குமார் தலைஞாயிறு ஒன்றிய அமைப்பாளர் அய்.பாஸ்கரன், திருவாரூர் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் கே.அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.