நாகர்கோவில், டிச.16 நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் பகுத்தறி வாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமையில் குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் வா.தமிழ்ப் பிர பாகரன் கூட்டத்தின் நோக்கங்கள் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநாட்டிற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்து சிறப்புரை யாற்றினார்.
கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாநகர கழகத் தலைவர் ச.ச. கருணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் எம்.பெரியார்தாஸ், கலை இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் எஸ்.அலெக்சாண்டர், மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை, தோழர்கள் சி. காப்பித்துரை, எ.ச.காந்தி, வெள்ளிச்சந்தை இரவி, மயிலாடி மதன் மற்றும் தோழர்கள் பலரும் பங்கேற்றனர்.
மறைவுற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுடைய மறைவுக்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 28, 29 திருச்சியில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழக அகில இந்திய மாநாட்டில் குமரிமாவட்டத் தோழர்கள் அனைவரும் குடும்பத்தினரோடு பெருந்திரளாகப் பங்கேற்பது எனவும், அந்த மாநாட்டிற்கு நன்கொடைகளை திரட்டி வழங்குவது எனவும், மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்ப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
குமரி மாவட்டக் கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை ஆகியோர் மாநாட்டிற்கு முன்பதிவு செய்த னர்.