1957 சட்டமன்றத்தில் முதலமைச்சர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞருடன் சேர்த்து 15 பேர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களாக அவையில்..
POINT OF ORDERஇல் கேள்வி கேட்க, தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் ஆசைதம்பி (இளம் பெரியார் என்று பெயரெடுத்தவர்) கையை முதன்முறை உயர்த்துகிறார். சபா நாயகர் பார்க்கவில்லை. இரண்டாம் முறையும் கை உயர்த்த, சபாநாயகர் பார்க்கவில்லை.
மூன்றாவது முறையும் சபாநாயகர் பார்க்கவில்லை. ஆனால் காமராஜர் அருகில் இருந்த நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் பார்த்துவிட்டார். உடனே நக்கலாக, “ஆசைதம்பிக்கு சிறுநீர் வந்தால் வெளியே போகலாம். இதற்கெல்லாம் அனுமதி கேட்க தேவையில்லை” என்றார். காமராஜர் உட்பட, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொல் லென சிரிக்கின்றனர். ஆசைதம்பி வெறுப்பாக அமர்கிறார். படாரென எழுந்தார் கலைஞர்.
“மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, ஆசைதம்பிக்கு சிறுநீர் வந்தால் நிதியமைச்சர் சி.சுப்ரமணியம் வாயை திறக்கிறார்” என்றார்.
இதுதான் போர்க்குணமிக்க அங்கதம் என்பது. இப்படியெல்லாம் பேசுவதற்கு கருத்தியல் வெறியும் மொழிஆற்றலும் யாவற்றுக்கும் மேலாக ஒப்பிலா துணிச்சலும் தேவை. அதனால் கலைஞர் காலத்தை வெல்கிறார்.