புலவன்காடு, டிச. 15– புலவன் காட்டில் தமிழர் தலைவர் 92ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழா, அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள், பெருங்கொடையாளர் மெ.நல்லான் முதலாம் ஆண்டு நினைவு நாள் உடல் கொடை, கண் கொடை, குருதிக் கொடை விழிப்புணர்வு சிந்தனையரங்கம் நடைபெற்றது.
உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம், தஞ்சை மருத்து வக் கல்லூரி மருத்துவமனை, மாநல் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து பெருங்கொடையாளர் மெ.நல்லான் முதலாமாண்டு நினைவுநாள், தமிழர் தலைவர் அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உடல் கொடை, கண் கொடை, குருதிக் கொடை விழிப்புணர்வு சிந்த னையரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்விற்கு தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்தார். அனைவரையும் கூட்டுறவு சங்கத்தலைவர் சரவ ணன் வரவேற்றார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகத் தலைவர் த.ஜெகநாதன், மேனாள் ஊரட்சி மன்றத் தலைவர் அன்புமணி ஆகி யோர் முன்னிலை ஏற்றனர். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் அனிஸ் உடல் கொடை, கண் கொடை, குருதிக் கொடை பற்றிய செய்திகளை கூறி விழிப்புணர்வு உரையாற்றினார். இறுதியாக திராவிடர் கழக பேச்சாளர் இராம.அன்பழகன் தமிழர் தலைவரின் தொண்டினை எடுத்துக்கூறி உடல் கொடை, கண் கொடை, குருதிக் கொடை வழங்குதால் ஏற்படும் பயன்களை விளக்கி சிறப்பு ரையாற்றினார்.
நிகழ்வில் மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் பெரியார் வீர விளை யாட்டுக்கழக மாநில செயலாளர் நா இராமகிருஷ்ணன், மே.ஊ.ம.தலைவர் கிருஷ்ணன், மே.ஊ.ம. தலைவர் அரங்க. தமிழேந்தி, ஒன்றிய கழக விவசாய அணித்தலைவர் மா.மதியழகன், ஒன்றிய து.செயலாளர் கு.லெனின், ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார், தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.ராம லிங்கம், ஒக்க நாடு மேலையூர் கிளைக் கழக செயலாளர் நா.வீரத்தமிழன், பொறியாளர் ப.பாலகிருஷ்ணன், சபரிநாதன் மண்டலக்கோட்டை இரா.மோகன்தாஸ் அ.செந்தில்குமார் புதுவளவு மெய்யழகன் உள்ளிட்ட கழகத் தோழர்களும் உறவினர்களும் ஊர் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதலாவதாக பெருங்கொடையாளர் மெ.நல்லான் நினைவிடத்தில் கல்வெட்டு நிறுவுதல் நிகழ்வும், பிறகு இல்லத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தல் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் 6 பேர் உடல் கொடையும், 4 பேர் உடல் உறுப்பு கொடையும், 10 பேர் கண் கொடை, 16 பேர் குருதிக் கொடையும் வழங்க பதிவு செய்து கொண்டனர். இறு தியாக அனைவருக்கும் உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் மாநல் பரமசிவம் நன்றி கூறினார்.