பெரியாரை உலகமயமாக்குவோம் உலகை பெரியார் மயமாக்குவோம் எனும் நோக்கத்தில், சமூகநீதிக்கான உலகின் முதல் OTT-ஆக PERIYAR VISION OTT தளம் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, திரைப்பட நடிகர் இனமுரசு சத்யராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
PERIYAR VISION OTT தளத்தில் உரைவீச்சுகள், நேர்காணல்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், வலைத்தொடர்கள் மற்றும் வகுப்புகள் ஆகியன இடம்பெற்றுள்ளன. ஒலி, ஒளிப் புத்தகங்கள், இசை ஆக்கங்கள் என பல வடிவங்களிலும் பகுத்தறிவு, சமூகநீதி, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் திரையிடப்படுகின்றன.
இதனை ஆண்டிராய்டு தொலைக்காட்சிகளிலும், ஆப்பிள் மற்றும் ஆண்டிராய்டு திறன்பேசிகளிலும் கண்டு பயன்பெறலாம்.
‘PERIYAR VISION’ OTT-யில் ஓராண்டுக் கட்டணம் ரூ.750, அரையாண்டுக் கட்டணம் ரூ.500 ஆகியவற்றுள் உங்களுக்கு விருப்பமான திட்டத்தை தேர்வு செய்து சந்தா செலுத்தலாம். மேலும் சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லவும்.
சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு அழைக்கவும்: 7395891099