எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் ‘ஆப்டிமஸ்’ ரோபோ, அப்படியே அச்சு அசலாக மனிதனை போலவே நடக்கும் காட்சிப் பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதன்முதலில் புல்வெளியில் இந்த ரோபோவை டெஸ்லா விஞ்ஞானிகள் நடக்கவிட்டனர். அப்போது பள்ளத்தில் இறங்க தெரியாமல் திணறிய ‘ஆப்டிமஸ்’, சிறிது நேரத்திலேயே மனிதனை போல ஏறி இறங்கியது. எதிர்காலம் ரோபோக்களின் யுகம் என சொல்வது உண்மைதான் போல..