படிப்பு, வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மற்ற நாட்டினரை விட, இந்தியர்கள் தான் அதிகளவில் (1.80 கோடி) வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 54.09 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அடுத்ததாக அய்க்கிய அரபு நாடுகளில் 35.68 லட்சம், மலேசியாவில் 29.14 லட்சம், கனடாவில் 28.75 லட்சம், சவுதியில் 24.63 லட்சம் பேர் வசிக்கின்றனர்.