தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் தென்கொண்டார் இருப்பு சுயமரியாதைச் சுட ரொளி செ. காத்தையன் அவர்க ளின் புதிய இல்ல அறிமுக விழா இன்று (15.12.2024) காலை 8 மணி யளவில் நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாநகர இணை செயலாளர் இரா.வீரகுமார், ஆகியோர் தென்கொண்டார் இருப்பு காத்தையன் இல்லத்திற்கு சென்று காத்தையனின் வாழ்விணையர் தனலட்சுமி அம்மையார் மகன் கா. இமையவரம்பன் ஆகியோரை சந்தித்து இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.