திருவாரூர், டிச.15 திருவாரூர் மாவட்டம் காட்டூர் விளாகம் காலம் சென்ற சிங்காரத்தின் மகன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த இயக்கத் தோழர் சி.செங்குட்டுவன் நேற்று (14.12.2024) மறைவுற்றார். அவருக்கு இன்று (15.12.2024) காலை 10 மணிக்கு இரங்கல் கூட்டம் அவரது இல்லத்தில் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை கழக அமைப்பாளர் வீ.மோகன் முன்னிலையில் மறைந்த செங்குட்டுவன் உடலுக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.ஜெ.உமாநாத், மாநில சட்டக்கல்லூரி அமைப்பாளர் மு.இளமாறன்,மாவட்ட செயலாளர் சவு.சுரேஷ், மாவட்ட ப.க தலைவர் அரங்க.ஈவேரா, மாவட்ட ப.க மேனாள் தலைவர் இரா.சிவகுமார்,மாவட்ட துணைத் தலைவர் கி.அருண் காந்தி, மாவட்ட விவசாயணி செயலாளர் க.வீரையன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் நேரு, நகர தலைவர் க.சிவராமன், நகரச் செயலாளர் ப.ஆறுமுகம், நகரத் துணைத் செயலாளர் நா.துரைராஜ், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.மகேஸ்வரி, மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் வீ.புட்பநாதன், குடவாசல் ஒன்றிய தலைவர் ஏகாம்பரம் செயலாளர் சரவணன், திருவாரூர் ஒன்றிய தலைவர் கா.கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் கு.ராஜேந்திரன், குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர், முருகேசன், வீரபத்திரன், மனோகரன் திமுக கிளை செயலாளர், மற்றும் கழகத் தோழர்களும், கிராமவாசிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். எந்தவித மூட பழக்க சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடைபெற்றது.
காட்டூர்விளாகம் சி.செங்குட்டுவன் மறைவிற்கு கழகத் தோழர்கள் இரங்கல் – மரியாதை
Leave a Comment