தருமபுரி, டிச.15 டிசம்பர் 28, 29 இல் திருச்சியில் நடைபெறும் இந்திய அளவிலான பகுத்தறிவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டிற்கு தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் ரூபாய் 25000 முதல் தவணையாக வழங்கப்பட்டது.
10.12.2024, செவ்வாய் மாலை 06:00 மணிக்கு தருமபுரி பெரியார் மன்றத்தில் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட செயலாளர் இர.கிருட்டிணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் தி.அன்பரசு வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கு.சரவணன், மாவட்ட செயலாளர் பீம்.தமிழ்பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் க.கதிர், மாவட்ட துணைத்தலைவர் இ.மாதன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் சின்னராசு, அரூர் மாவட்ட கழகத்தலைவர் அ.தழிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாநில தலைமை கழக அமைப்பா ளர் ஊமை.ஜெயராமன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கரு ணாநிதி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ந.அண்ணாதுரை, மகளிரணி மாநில செயலாளர் தகடூர்.தமிழ்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.
இந்திய அளவிலான பகுத்தறிவா ளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டின் நோக்கம், நிகழ்ச்சி நிரல், திட்டமிடல், விழா சிறப்பு, பகுத்தறி வாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொலைநோக்கு பார்வை ஆகியவை குறித்து மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் விரிவாக எடுத்து ரைத்து சிறப்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில், ஊமை.காந்தி, மு.சிசுபாலன், பெ.கோவிந்தராஜ், மாதேஷ், ச.கி.வீரமணி, ச.கி.செம்மொழி அரசு, கண்.இராமச்சந்திரன், கே.ஆர்.குமார், த.மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திருச்சி மாநாட்டில் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 25 பேர் பேராளர்களாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்டத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையாக வசூலித்து அளிப்பதென தீர்மானித்து அதில் முதல் தவணையாக ரூபாய் 25,000 மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வனிடம் வழங்கப்பட்டது.
ஆசிரியர் ச.வாசு நன்றியுரை ஆற்றி னார்.