தூத்துக்குடி, டிச.15 மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 8.12.2024 அன்று மாலை 6 மணிக்குத் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொள்கைக் குடும்ப விழாவாக கொண்டாடப்பட்டது.
மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் ச.வெங்கட்ராமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
“விடுதலை ஏட்டின் பணிகள்” என்ற தலைப்பில் பகுத்தறிவாளர் கழக புரவலர் சீ.மனோகரனும், “உண்மை இதழின் பணிகள்” என்ற தலைப்பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சொ.பொன்ராஜூம் உரையாற்றினர்.
சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் படத்தினைத் திறந்து வைத்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வியும், அறிஞர் அண்ணா படத்தினை திறந்து வைத்து கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரனும் புகழுரை வழங்கினர்.
“தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா செயல்பாடுகள்” என்ற தலைப்பில் கழகக் காப்பாளர் சு.காசி, திமுக இலக்கிய அணி அமைப்பாளர் மோ.அன்பழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்வியல் சிந்தனைகள் 18 ஆம் தொகுதியினை அறிமுகம் செய்து கழகக் காப்பாளர் மா.பால்இராசேந்திரம் மிகச் சிறப்பாக உரையாற்றி நூலினை வெளி யிட்டார்.
இருபால்தோழர்களும் வரிசையாக வந்து நூலினை வாங்கி மகிழ்ந்தார்கள்.
ஜாதி ஒழிப்புபு் பணிகளை….
நிறைவாக கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தனது உரையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணடிமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு பணிகளையும், ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா ஒப்பற்ற பணிகளையும்,திராவிட இயக்கத்தினர், பகுத்தறிவாளர்கள், கழகத் தோழர்கள் பார்ப்பன சூழ்ச்சிகளை முறியடிக்க மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும் சுட்டிக்காட்டி எழுச்சிமிகு மிகுந்த உரையாற்றினார்.
நிகழ்வில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாவட்டச் செயலாளர் கோ.முருகன், மாவட்டத் துணைத்தலைவர் இரா. ஆழ்வார், மாவட்டத் துணைச் செயலா ளர் சி.மணிமொழியன், மாவட்ட தொழி லாளரணி அமப்பாளர் த.நாகராசன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ந.செல்வம், மாவட்ட வழக்குரைஞர் அணித் தலைவர் பா.இராசேந்திரன், மாநகர கழகத் தலைவர் த.பெரியார்தாசன், மாநகர கழகசெயலாளர் செ.செல்லத்துரை, திருவைகுண்டம் ஒன்றிய தலைவர் சு.திரு மலை குமரேசன், கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் செ .ஜெயா, அ.பிரசாத், பெரியார் பெருந்தொண்டர்கள். கி.கோபால்சாமி, கரு. மாரியப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. நவீன் குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் செ.வள்ளி, விளாத்திகுளம் ஒன்றிய தலைவர் மு .பாலமுருகன், புதூர் ஒன்றிய தலைவர் வெ. பாலமுருகன், பெரியார் மய்யக் காப்பாளர் பொ. போஸ், மகளிரணித் தலைவர் ஹேமா ஜெயகிருஷ்ணன் உள்ளிட்ட பெருமக்கள் கலந்து கொண்டு நூல்கள் வாங்கி சிறப்பித்த னர்.
பிறந்தநாள் மகிழ்வாக வருகை தந்த அனைவருக்கும் இரவு விருந்தளித்த மாவட்ட கழக பொறுப்பாளர்களுக்கும், நன்கொடை வழங்கி சிறப்பித்த பெருமக்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.