20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க ஏ.அய். தொழில் நுட்பத்துடன் திறன் மேம் பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச் சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்ற, தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளது” என்றார்.