பக்தி வந்தால் புத்தி போகும்

2 Min Read

கடவுளை நம்புவது, மதத்தை மதிப்பது, தன் மதக்கடவுளை மட்டும் வணங்குவது, அனைத்து மதக் கடவுளரையும் சமமாகக் கருதி வழிபடுவது, கடவுளே இல்லை என்று சொல்வது எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் உரிமை.

ஆனால் பொது வெளி யில், நம்பிக்கையுள்ள தன் மதத்துக்காரரையே சாஸ்திர விதிகளைச் சொல்லி ஆலயத் திற்குள் நுழைய விடாமல் தடுப்பது, பூசை செய்ய அனுமதி மறுப்பது, அதுபோல நம்பிக்கையுள்ள மாற்று மதத்துக்காரர்களை வழி பட உள்ளேவிட தடுப்பது போன்ற மனித உரிமை மீறலை கேள்வி கேட்காமல் இருக்க முடியாது.

இசுலாமியரான புகழ்பெற்ற பரதக்கலைஞர் ஜாகிர்உசேன் என்பவர் தன்னைத் தீவிர பெருமாள் பக்தர் என்று கூறிக் கொள்பவர். ஒரு சமயம் அவர் திருவரங்கம் ஆலயத்திற்குள் சென்று வழிபட்டபோது அது அபச்சாரம் என்று அங்கலாய்த் தனர். புனிதம் கெட்டுவிட்டது என்று புழுங்கினார்கள்.

குறிப்பாக, அன்றாடம் அந்த ஆலயத்திற்குச் செல்லும்போது தன் கண்ணில் படும் பெரியார் சிலையைப் பார்த்திருந்தும் ஓர் ஊடகத்தில் பேசும்போது, “பெரியாரா யார் அவர்? எனக்குத் தெரியாதே!” என்று பேசிய மெத்த படித்த லா-பாயிண்ட் பார்ப்பனர் ஒருவர் குதித்த குதி நாடறிந்ததே.!

இந்த ஜாகிர்உசேன் கடந்த 11-12-2024 அன்று விலை மதிப்பற்ற ஒற்றை மாணிக்கக்கல்லில் வைரங்கள் பதித்த தங்க கிரீடம் ஒன்றை திருவரங்கம் பெரு மாளுக்குக் காணிக்கையாக வழங்கியுள்ளார். அதனை சிறிதும் கூச்சமில்லாமல் ஆலய அர்ச்சகர் சுந்தர் பட்டர் உள்பட நிருவாகிகள் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

அதைத் தொடர்ந்து உசேன் ஆலயத்திற்குள் வந்து தரிசனம் செய்ய வேண்டுமாயின் “ நான் இந்தக் கோயிலில் உள்ள தெய்வத்தை நம்புகிறேன்” என்ற உறுதிமொழியைக் கொடுத்தபின் செல்ல வேண்டும் என்று கூற, அவர் அதை விரும்பாமல் பெருமாளை தரிசிக்காமல் சென்றுவிட்டார் என்றும், ஏற்ெகனவே இக்கோயி லில் தரிசனம் செய்தது பெரும் சர்ச்சையாயிற்று என்பதால் அதைத் தடுப்பதற்கு உசேன் அப்படிச் செய்தார் என்றும் ஊடகங்களில் செய்தி வெளி வந்துள்ளது.

( ஆதாரம் : 12-12-2024 அன்றைய ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ்)

தங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கோடிக்கணக்கான மதிப்பில் பிற மதத்துக்காரர் கிரீடம் கொடுத்தாலும், தன் மதத்திற்குள்ளேயே இருக்கின்ற ஜாதியால் கீழானவர் கோபுரம் கட்ட லட்சக்கணக்கில் நன்கொடை அளித்தாலும், சாஸ்திரப்படி அவர்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காத ஒரு மதத்தின் எந்த சாஸ்திரம் இப்படிக் கூச்சமில்லாமல் கொடைகளை வாங்கிக் கொட்டிக்கொள்ள அனுமதிக்கிறது?
தாங்கள் கடவுள் பெயரால், மதத்தின்பெயரால், ஜாதியின் பெயரால் அவமதிக்கப்படுகி றோம் என்று தெரிந்தும், தொடரும் இப்படிப்பட்ட நம் பிக்கைவாதிகளின் செயல்களை என்னவென்று சொல்வது!

”பக்தி வந்தால் புத்தி போய் விடும்” என்ற பகுத்தறிவு ஆசான் தந்தை பெரியாரின் வைர வரிகள்தான் இவர்களை நினைக் கையில் வருகிறது.

– ஞான. வள்ளுவன்
வைத்தீசுவரன்கோயில்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *