முல்லை பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல தமிழ் நாடு அதிகாரி களுக்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
டிச.4இல் தமிழ்நாடு பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் பொருள்களை கொண்டு சென்றபோது, அவர்களை கேரள காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேரவை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரளா தற்போது அனுமதி வழங்கியுள்ளது.