தமிழ்நாட்டில் டைப் 1 நீரிழிவால் பாதிக்கப்பட்ட 2,500 குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி செலுத்தப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 49.46 லட்சம் சர்க்கரை நோயாளிகள், 44.46 லட்சம் குருதி அழுத்த (BP) நோயாளிகள் பயன்பெறுவதாகக் கூறினார். உலகளவில் நீரிழிவு நோயாளிகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.