விவசாய தொழிலாளர்களுக்குக் குடியிருக்க வீடே இல்லாதிருப்பதும், அப்படியே இருந்தாலும் வசதியற்ற ஓட்டைக் குடிசைகள்தான் இருப்பதும், நல்ல உணவுக்கு வழியே இல்லாதிருப்பதும், சுருங்கச் சொன்னால் பாடுபடாத மக்களுடைய வசதியில் 3இல் ஒரு பங்கு, 4இல் ஒரு பங்கு வசதி கூட இல்லாதிருக்கும் கொடுமை நீக்கப்படும் வரை விவசாய வளர்ச்சியினை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’