நாகர்கோவில், டிச. 14- கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம், கழக இளைஞரணி சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுடைய 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சுங்கான்கடை சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட கழக இளைஞரணி தலைவர் எஸ்.அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப் பிரமணியம் முன்னிலை வகித்து உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தொடக்கவுரையாற்றினார்.
பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு திமுக வட்டச் செயலாளர் இராஜேஷ்குமார், விசிக குளச்சல் தொகுதி செயலாளர் எம்.சுபாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள் விஜி, சுரேஷ்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர். கழக சொற்பொழிவாளர் தேவ. நர்மதா தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய தொண்டுகள்,சமூகநீதிக்கான உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை குறித்து விரிவாக சிறப்புரையாற்றினார்.
திமுக வட்ட பிரதிநிதி பிரில் சேவா, விசிக துணை செயலாளர் ஞானசேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் மாநகர தலைவர் ச.ச. கருணாநிதி, செயலாளர் மு.இராஜசேகர், மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, தொழிலாளர் அணி அமைப்பாளர் க.யுவான்ஸ், மு.பால்மணி, மு.இராஜன், பி.கென்னடி, தி.ஞானவேல், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பங்கேற்றவர்களுக்கு நூல்கள், பயனாடைகள் வழங்கி மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் ஆகியோர் சிறப்பு செய்தனர்.